• Fri. May 10th, 2024

விவசாயத்திற்கு தேக்கி வைத்த தண்ணீரை திறந்து விட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள்.., கண்டனம் தெரிவித்த மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கம்..!

Byகுமார்

Dec 6, 2021

விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் நிலையூர் கண்மாயில் இருந்து தண்ணீரை இரவோடு இரவாக திறந்து விட்ட பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகளை என மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கம் சார்பாக வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான நிலையூர் 1பிட் கிராமத்திற்கு உட்பட்ட பெரிய கண்மாயானது திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் இருந்து வருகிறது. இந்த கண்மாயானது சதுர்வேதமங்களம் என்ற பெயரில் உள்ள கிராமத்தில் அமைந்துள்ளது.


தற்போது இந்த கிராமம் ஆனது கூத்தியார்குண்டு கிராமம் ஆகும். இந்த நிலையூர் 1பிட் கண்மாய் பாசானம் 5000ஏக்கர் நஞ்சை நிலங்களை கொண்ட இருபோக சாகுபடி செய்யும் வகையில் உள்ள விவசாய நிலங்களுக்கு தேவையான நீர் ஆதாரம் கொண்டது என்பது யாவரும் அறிந்ததே.
இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாயின் மறு காலை திறந்து விடுவதாக உள்ள வீடியோக்களை பார்த்தால் கூலிக்கு மாரடிக்கும் செயல்போல் தெரிகிறது.

இந்த செயலை மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக பொதுச் செயலாளர் திருப்பரங்குன்றம் பி எஸ் சண்முகநாதன் ஆகிய நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெய்ஹிந்த். நாட்டோரே நல்லோரே கண்டிப்பை தெரிவியுங்கள் ஜெய்ஹிந்த்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *