• Mon. Mar 17th, 2025

குமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஜோசப் கலசான் சிபிஎஸ்யி பள்ளியில் நடைபெற்றது.

மாநில அளவில் 40 பள்ளிகளை சேர்ந்த 600 மாணவ மாணவியர்கள் பங்கேற்ற கராத்தே போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. ‘வாங்காய் ஷிட்டோ ரைவ் கராத்தே டு இந்தியா’ என்ற அமைப்பின் சார்பில் 17வது மாநில அளவிலான போட்டிகள் கன்னியாகுமரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கலசான் சிபிஎஸ்சி பள்ளிக்கூடத்தில் வைத்து நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இப்பள்ளியின் முதல்வர் பங்குத்தந்தை ஜின்ஸ் ஜோசப் தலைமை தாங்கினார்.

பள்ளியின் தாளாளர் டினோ கூட்டச்ச பரம்பில், மற்றும் கோவளம் புனித இக்னேசியஸ் தொடக்கப்பள்ளியின் தாளாளர் பங்குத்தந்தை சகாய சுனில் , ஞானதீபம் மெட்ரிக் பள்ளியின் நிர்வாகி ஜே மீனா ஜோதி, மேரி யுமாக்குலேட் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஒய் மரிய பில்டீஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரிவு வாரியாக போட்டிகளை துவங்கி வைத்தனர். இந்த அமைப்பின் தலைவர் டாக்டர் ஹன்சி ஹெச் ராஜா ஏற்பாடுகளை செய்திருந்தார். மாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சான்றிதழ் மற்றும் வெற்றி கோப்பையுடன் வந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோர்கள் கட்டித் தழுவி முத்தம் இட்டதை காண முடிந்தது.