மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கு விழா நடைபெற்றது
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடத்தப்பட்டது இதில் மாநிலத்திலிருந்து 26 மாவட்டங்களில் இருந்து 450 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் சப்ஜூனியர் ,ஜூனியர், யூத் மற்றும் சீனியர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது இந்த போட்டிகளைசேது பொறியியல் கல்லூரியும் விருதுநகர் மாவட்ட அமைச்சூர் மற்றும் ப்ரொபஷனல் குத்துச்சண்டை சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் .முகமது ஜலில் தலைமை நிர்வாக முதன்மை அலுவலர் எஸ். எம். சீனி முகைதீன் ,இணை முதன்மை நிர்வாக அலுவலர் எஸ் .எம் சீனி முகமது அலி யார் நிர்வாக இயக்குனர்கள் எஸ் .எம் நாசியா பாத்திமா நிலோபர் பாத்திமா ,முதல்வர் செந்தில்குமார், தமிழக மாநில குத்துச்சண்டை கழக பொதுச் செயலாளர் பிரித்திவிராஜமற்றும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முருகன் உடற்பயிற்சிஇயக்குனர் மற்றும் தேசிய மாணவர் படைஇயக்குனர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் ஆகிேயோர்கலந்து கொண்டனர்.
சப் ஜூனியர் பிரிவில் சென்னை வி எஸ் ப பிசி அமைப்பு அணி சாம்பியனையும் ,ஜூனியர் பிரிவில் திருநெல்வேலி அசோசியேஷன் அமைப்பும், யூத் பிரிவில் விருதுநகர் அமைப்பு , சீனியர் பிரிவில் சென்னை வி எஸ் பி சி அமைப்பு பிரிவும் சாம்பியன் பட்டத்தை பெற்றது .இதில் நான்கு பிரிவுகளில் சப் ஜூனியர் ஜூனியர் யூத் ,சீனியர் பிரிவு எனஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது சீனியர் பிரிவில் 7 ஆண்களும் ஆறு பெண்களும் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் ரைப்பிலரி நடக்கும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தமிழகம் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர் மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற மாணவர்கள் இத்தாலியில் நடக்கும் உலக அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள் மற்ற பிரிவுகளில் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு வெற்றி பெற்றவர்கள் செல்ல உள்ளார்கள்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)