• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஸ்டான்ஃபோர்டு ஸ்பெஷாலிடி லேப்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா..!

Byஜெ.துரை

Sep 20, 2023

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மல்லேஷ்வரத்தில் ஸ்டான்ஃபோர்டு ஸ்பெஷாலிடி லேப்ஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருமதி யமுனா பிரபாகரன் வரவேற்புரை ஆற்றினார் இதனை தொடர்ந்து ,கர்நாடக மாநில பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் P.பாஸ்கர் ரெட்டி நிகழ்சிக்கு முன்னிலையில், சமூக ஆர்வலர்களான திருமதி ஸ்ரீலதா கிருஷ்ணன், ஹவா A.H.ஹன்ஜாரா, லட்சுமி தேஜஸ்வரி, கவிதா பிரேம் ஆனந்த், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் இதனை தொடர்ந்து நடைபெற்ற இவ்விழாவில், ஸ்டான்ஃபோர்டு குழுமத்தின் செயல் திட்டங்களை பற்றி மன்சூர் கான், ஸ்நேகாJ,P.ராஜ், KN நமீதா,பிரபாகரன் ஆகியோர் எடுத்து கூறினர்.

சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜானகி மோகன், பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாலி பாஸ்டன், சமூக ஆர்வலர் M.G.R.மணி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் G.P.செல்வகுமார், டி.எஸ்.கிருஸ்துதாஸ், டி.எஸ்.மகிமைதாஸ், தினகரன் பட்டு ராஜ், தினமணி தினகர வேலன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும்,ஸ்டான்ஃபோர்டு ஸ்பெஷாலிடி தலைமை நிர்வாக அதிகாரி, கமல் ரவீந்திரதாஸ் லேப்ஸ் மற்றும் திருமதி பூஜா கமல் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.