• Tue. May 7th, 2024

இந்தியாவின் இன்றைய ‘வட்ட வடிவ’ நாடாளுமன்ற கட்டிடம்.., உறுப்பினர்களிடம் இருந்து விடைபெறும் தினம்…

இந்தியா மக்கள் அனைவரின் ஜனநாயக கோவிலாக, சுதந்திரம் பெற்ற 75_ஆண்டுகளாக வட்டவடித்தில் இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களால் உயர்ந்து நின்ற அந்த ஜனநாயக கோவிலில் கடந்த 75_ஆண்டுகளில் நடந்த பொது விவாதங்கள், ஏற்றப்பட்ட சட்டங்கள்.கடந்து போன 75_ஆண்டுகளில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றிருந்த இருக்கைகள், உலா வந்த பகுதிகள், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கி லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், சரண் சிங்,ராஜூவ்காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, வி.பி.சிங், குஜரால், மன்மோகன் சிங், மோடி என்ற நீண்ட வரிசையில், நேரு, மகள், பேரன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பிரதமர்களாக பதவி ஏற்ற வரலாற்று நிகழ்வு நடந்த நாடாளுமன்றத்தில் இன்றைய நிலையில் நேருவின் குடும்பத்தை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடரும் நிலையை காண முடிகிறது.

அன்று நாகர்கோவில் நாடாளுமன்றம், இன்று கன்னியாகுமரி நாடாளுமன்றத்தில் இந்தியாவின் தென் கோடி பகுதியை சேர்ந்த நேசமணி, காமராஜர்,குமரி அனந்தன், டென்னிஸ் (7முறை) பொன்.ராதாகிருஸ்ணன், ஏ.வி.பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன், வசந்தகுமார், விஜய் வசந்த் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்) புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு,இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல இருக்கும் நிலையில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நினைவுகளை விடைபெறும் முன், இந்தியாவின் முதல் நாடாளுமன்ற குறிப்பேட்டில், சோனியா காந்தி பதிவு செய்த பின் அடுத்து அந்த பதிவேட்டில் விஜய் வசந்த் அவரது குறுகிய காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பதிவு செய்ததையும் அந்த நிழல் படத்தை அரசியல் டுடே விற்கு அனுப்பிய நிலையில் கை பேசியில் பிரியும் நாடாளுமன்ற கட்டிடத்தின் நேற்றைய வரலாற்றை மூத்த உறுப்பினர்கள் விஜய் வசந்திடம பகிர்ந்து கொண்டதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

எனது பெரியப்பா குமரி அனந்தன்,அப்பா வசந்த குமார்,நான் என் மூன்று பேர்களும்.நாகர்கோவில் மக்களவை பிரதிநிதிகள் குமரி தந்தை மார்சல் நேசமணி, பெரும் தலைவர் காமராஜர், பெரியப்பா,அப்பா அமர்ந்து இருந்த இருக்கையில் நானும் அமர்வதற்கு கிடைத்த வாய்ப்பு பெரும் பேராக கருதுகிறேன்.இந்த வாய்ப்புக் குறித்து காங்கிரஸ் கட்சியின் பல தலைவர் என்னக்கு தெரிவித்த வாழ்தின் வாசகங்கள் இதயத்தில் எதிரொலிக்கிறது.

நாடாளுமன்றக் கூட்டம் முன்பெல்லாம் 150 நாள் எல்லாம் தொடர்ந்து நடக்குமாம், இப்போது ஆண்டுகளுக்கு 30,முதல் 40 நாட்கள் நடந்தாலே அதுவே ஒரு அதிசயம்.

அன்னை இந்திரா காந்தி ஆட்சி பெரும்பான்மை ஆட்சி என்றபோதும்,அதிக அளவு நம்பிக்கையில்லா தீர்மானம் அன்னை இந்திரா மீது கொண்டு வரப்பட்டாலும்.எல்லா குற்றசாட்டுகளையும் பொறுமையாக கேட்டு அன்னை இந்திரா காந்தி பதில் அளிப்பாரம். அந்த காலகட்டத்தில் கூச்சல் குழப்பம்,பேச விடாமல் கூறுக்கிடுவது போன்றவை பெரும் பாலும் நிகழாது, எல்லா மசோதாக்களும் முழுமையாக விவாதம் நடந்த பிறகு தான் நிறைவேறுமாம். இன்று அப்படியான நிலை தொடர வேண்டும். அத்தகைய நிலை புதிய நாடாளுமன்ற அவையில் நடத்த இன்றைய ஆட்சியாளர்கள், எதிர் கட்சி வரிசை உறுப்பினர்கள் அனுமதித்து இந்திய நாடாளுமன்றம் ஜன நாயகத்தின் கோயில் என்ற நட்டு மக்களின் நம்பிக்கை நனவாக்க வேண்டும் என்ற விஜய் வசந்தின் இன்றைய கனவையும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *