• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மேலூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின்..,

ByM.S.karthik

Sep 30, 2025

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் Dr. சிவனேசன் அரசு இராஜாஜி மருத்துவமனை டீன் அருள்சுந்தரேஸ், நுரையீரல் துறை (TB) துணை இயக்குநர் ராஜசேகரன் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் விஜயன் குடும்ப நலன் துணை இயக்குநர் நடராஜன், NHM செந்தில்னேஷ்,துணை சுகாதார நிலைய தலைமை மருத்துவர்கள் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வராஜ், அலுவலர்கள் சுந்தரமூர்த்தி சிவசந்திரன் சரவணன் ஜெயக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் கண் இதயம் பொது மருத்துவம் குழந்தை வளர்ச்சி மகப்பேறு மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல்,அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவம் மகளிர் மருத்துவம் மனதள மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் சித்த மருத்துவம் நீரிழிவு நோய் மருத்துவம் உட்பட அனைத்து விதமான மருத்துவம் சம்பந்தமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் மேலூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.