இம்முகாமினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்து உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவப்பெட்டகத்தை வழங்கினார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன்,ஒன்றிய கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி. வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர் என்.வேதகிரி,துணைத் தலைவர் S.லோகிதாஸ்,வார்டு உறுப்பினர் O.K.S.சதீஷ், ஆகியோர் உடன் இருந்தனர்
மேலும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்ட மகளிர் பயன்பெறவும்,சாதி சான்றிதழ் பெறவும், பட்டா மாற்றம் செய்தல், மருத்துவ காப்பீடு அட்டை பெறவும், ரேஷன் அட்டையில் முகவரி திருத்தம் போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இன்றி அலுவலர்கள் நேரடியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.