• Sun. Mar 16th, 2025

ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும்… கோலப் போட்டியில் வெளிக்காட்டிய பெண்கள்!

ByT. Vinoth Narayanan

Mar 7, 2025

2026-ல் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்று பெண்கள் கோரிக்கையாக கோலப்போட்டியில் தன் எண்ணத்தில் உள்ளதை வரைந்து இருக்கின்றனர். இதைக் கண்டு நான் பெருமைப்படுகிறேன் என இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தங்கப்பாண்டியன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் (07.03.2025) இன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கிராமம் பேரூர் மற்றும் நகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் & சிறப்பு திட்டங்களை பிரதிபலிக்கும் பிரம்மாண்டமான கோலப்போட்டி நடைபெற்றது,

இக்கோலங்கள் அனைத்தையும் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் கிராமம் கிராமமாகவும் பேரூர் மற்றும் நகராட்சி பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார், அதனைத்தொடர்ந்து கோலப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உறுப்பினர தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் கோலப்போட்டி நடைபெற்றது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ள அனைவரும் நன்றி தெரிவிப்பதாக கூறினார், மேலும் பெண்களுக்கான சிறப்பான ஆட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்துவருகிறார் எனக்கூறினார், இப்போட்டியில்கலந்து கொண்ட பெண்கள் மீண்டும் 2026 ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டுமென கோலத்தை வரைந்ததாக கூறினார்கள், அதற்கு பதிலளித்தசட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் .., பெண்கள் ஆதரவு தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் முதல்வராவது உறுதிஎனக்கூறினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா செட்டியார் பட்டி சேர்மன் ஜெயமுருகன் ,பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ,மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட கவுன்சிலர்கள் ராதா சீனிவாசன் ராஜன் குணா தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் மாரிமுத்து கிளைச்செயலாளர்கள் தொந்தியப்பன் லட்சுமணன் உமா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் மாணவரணி நாகேஷ்வரன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.