• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

துபாய் செல்ல இருக்கும் முதல்வர் ஸ்டாலின்..

Byகாயத்ரி

Mar 18, 2022

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ள நிலையில் தனது முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்ல உள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்வராக கடந்த ஆண்டு மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டது முதலாக பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த காலகட்டத்தில் இதுவரை 3 முறை டெல்லி சென்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக இதுவரை வேறு எந்த நாட்டுக்கும் பயணிக்கவில்லை. தற்போது முதல் பயணமாக மார்ச் 25ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். துபாயில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடும் முதல்வர் பின்னர் அங்குள்ள நிறுவனங்கள் சிலவற்றோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.