• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நலம் காக்கும் ஸ்டாலின்மருத்துவ முகாம்..,

ByKalamegam Viswanathan

Feb 23, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் கர்ப்பிணி உதவித்தொகை வழங்கினார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, தலைமையாசிரியர் திலகவதி, மாவட்ட நலக்கல்வியாளர் முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில் கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர்அஸ்வினி தலைமையில் டாக்டர்கள் ஹரிஷ் நிர்மல் குமார், மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம், சமுதாய சுகாதார செவிலியர் நித்திய கல்யாணி, சுகாதார ஆய்வாளர்கள் பகுதி சுகாதார செவிலியர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் துறைசார் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமினை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடல் எடை ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஸ்கேன் எக்கோ உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சிறப்பு உயர்தர சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். இதில் 1200 க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.