மதுரை சிந்தாமணி ரோடு சூசையப்பபுரம் பதுவை புனித அந்தோனியார் ஆலய 77 ஆம் ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு தேர் திருவிழா பவனி நடைபெற்றது.
மதுரை சிந்தாமணி பதுவை புனித அந்தோணியர் திருவிழா நிகழ்ச்சி 13 நாட்கள் நடைபெறும்.
மதுரை சிந்தாமணி அருகே உள்ள சூசையப்பரப்புரத்தில் பதுவை புனித அந்தோணியார் ஆலய 77வது ஆண்டு திருவிழா கடந்த 17ம் தேதி கொடியற்றத்துடன் துவங்கியது.

பதுவை புனித அந்தோனியார் மின் அலங்கார தேர் திருவிழா தூய மரியன்னை தேவாலாயத்தில் இருந்து சிறிய தேரில் சூசையப்பர், பெரிய மின் அலங்கார தேரில் மரியன்னையும், 3வது பெரிய மின் அலங்கார தேரில் பதுவை புனித அந்தோனியர் தேர்கள் கீழவாசல், குயவர்பாளையம் ரோடு, வாழை தோப்பு, சூசையப்பர் புரம் பகுதிகளில் திருத்தேர் வலம் வந்தது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள் இணைந்து திருக்கண் அமைந்து தங்கள் வரவேற்றனர்.
தேர்திருவிழா நிகழ்ச்சிக்காக தூய மரியன்னை ஆலய அதிபரும் பங்குத்தந்தைமான ஹென்றி ஜெரேரம் இணை பங்கு தந்தைகள் ஜோ லிவிங்ஸ்டன் அருட்பணி பெனிட்டோ ஆகியோர் தலைமையில் புனித சூசையப்பர், பதுமை புனித அந்தோணியார் ,தூய மரியன்னையும் அலங்கார மிந்தோரில் பவனி வந்தனர்.
தேவாலயத்தில் இருந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்து ஊர்வலமாக தேர்கள் எடுத்து வரப்பட்டு பதுமை புனித அந்தோனியார் ஆலயத்தில் சேர்க்கப்பட்டது.

பின்னர் பங்கு தந்தை ஹென்றி ஜெரோம் திருப்பலி நடைபெற்றது. திருப்பலிக்கு பின் அருட்பேராயர்களின் கூட்டுப் பிரார்த்தனை ஜெப வழிபாடு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிந்தாமணி சாமநத்தம் ,மேல அனுப்பானடி , வீட்டு வசதி வாரிய. குடியிருப்பு, வில்லாபுரம் ஆகிய பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து மின் அலங்கார தேர் பவனி நிகழ்ச்சியில் கொண்டனர்.
பின்னர் பதுமைஅந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்குபெற்றனர். சிறப்பு நிகழ்ச்சியாக வரும் 29ஆம் தேதி பதுவை புனித அந்தோணியாரின் திருக்கோயிலில் சமபந்தி அன்னதான நிகழ்ச்சியும்,
அதனை தொடர்ந்து 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும் அவனைத் தொடர்ந்து திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பதுவை புனித அந்தோனியரின் 77வது ஆண்டு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் ஜேசுதாஸ் மற்றும் துணைத் தலைவர் ஜான் பீட்டர் செயலாளர் மரிய பிச்சை துணைச் செயலாளர் செல்வம் பொருளாளர் ஜெயசீலன் மற்றும் துணை பொருளாளர் ராஜா சிங் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு திருப்பலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.