ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை மேலே அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் பக்தர்களால் தென்திருப்பதி அழைக்கப்படும். இங்கு சீனிவாசபெருமாள் ஆந்திர மாநிலம் திருப்பதி பெருமாளை போல நின்ற நிலையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இந்தகோயிலில் புரட்டாசி மாதம் சனிவார கருட சேவை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அப்பொழுது தமிழ்நாடு முழுவதும் இருந்து நான்கு சனிக்கிழமைகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சீனிவாச பெருமாளை தரிசிப்பது வழக்கம். இவ்வளவு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோவிலில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி வேலைகள் நடந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்தநிலையில் தற்பொழுது இந்த கோயிலில் கும்பாபிஷேக பணிகள் பல கோடி மதிப்பீட்டில் திருப்பணி வேலைகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பூர்த்தி ஆகி உள்ளது.இதில் கோயில் முழுவதும் ராஜகோபுரம் சீர் செய்தல் சிற்பங்களை சுத்தம் செய்தல் சுற்றுப்புறங்களில் கல் தளம் பதித்தல் பக்தர்கள் 50 படிகளில் வெயில் மழை காலங்களில் சிரமம் இன்றி செல்ல மேற்கூரைகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்றது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் குடும்பத்தார் ரூ.பல கோடி மதிப்பில் திருப்பணிகளை செய்தனர்.
மேலும் திருப்பூர் தொழிலதிபர் அருண் பாலாஜி மற்றும் குடும்பத்தார் திருப்பணிகளை செய்துள்ளனர். இதனால் கோயில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது திருப்பணி வேலையின் காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கோவில் கும்பாபிஷேகம் ஜூலை மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜை அமைக்க முகூர்த்த கால் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் ராஜ அலங்காரத்தில் திகழ்ந்தார் இதனை தொடர்ந்து கோயில் அர்ச்சகர்கள் ரகுராம பட்டாச்சாரியார் கிரி பட்டர் பத்ரி பட்டர் ஆகியோர் வைணவ ஆகம முறைப்படி பூஜைகளை செய்து முகூர்த்தக்கால் நட்டு வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சௌ.சக்கரை அம்மாள் கோயில் மணியம் கர்ணன் திருப்பணி உபயதாரர்கள் கோயில் அலுவலர்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள் கண்காணிப்பாளர் ஆவுடையம்மாள் ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்