• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மன்..!

ByKalamegam Viswanathan

Oct 20, 2023

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, சிவகாசி ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமுப்பிடாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 5ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீமுப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.இதனையடுத்து ஸ்ரீமுப்பிடாரி அம்மன் ரூபாய் நோட்டுகளால் ஆன மாலையும், காசுகளால் கோர்க்கப்பட்ட மாலையும் அணிவிக்கப்பட்டு, தாமரை பீடத்தில் ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதனலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.