• Sun. Apr 28th, 2024

பேரிடர் காலங்களின் போதுபாதுகாப்பு செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டம்..!

ByKalamegam Viswanathan

Oct 20, 2023
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காக இன்று அதாவது அக்டோபர் 20ம்தேதி, செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை நடத்தப்பட்டது.
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பம் ஆகும். மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தொலைத்தொடர்பு துறை இணைந்து ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருந்தது.
அந்தவகையில் பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்காக "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" சோதனை ஓட்டம் 20.10.2023 நடத்தப்பட்டது.
கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க "செல் ஒலிபரப்பு எச்சரிக்கை" பயன்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *