• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலம்…..

ByKalamegam Viswanathan

Jul 1, 2023

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆனி பிரமோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக ஸ்ரீசொக்கநாதர் சுவாமிக்கும், ஸ்ரீமீனாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஸ்ரீசொக்கநாதர் சுவாமி – ஸ்ரீமீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில், கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். பக்தர்கள் கொண்டு வந்த பல வகையான சீர்வரிசைப் பொருட்கள் திருக்கல்யாண விழாவிற்கு சீதனமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து திருக்கல்யாண யாக பூஜைகளை, தொடர்ந்து சிவச்சாரியார்கள் மந்திரம் முழங்க ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் மாலை மாற்றும் நிகழ்ச்சிகளும் அதனைத் தொடர்ந்து சிறப்பு திருக்கல்யாண அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி – ஸ்ரீசொக்கநாதர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.