



மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 109 ஆம் ஆண்டு பங்குனி உற்சவம் பெருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மாபெரும் அன்னதானம் உபயதாரர்கள் எ முருகுஇலக்குவன் என்ற அரவிந்தன் கிருஷ்ணவேணி தம்பதியினர், தொழிலதிபர் டெம்பிள் சிட்டி குமார் புவனேஸ்வரி மருத்துவமனை வள்ளல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ் அருண் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் விஷ்ணு முத்துசாமி கணேஷ்குமார் பத்மநாபன் தலைமையில் விழா குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

