



மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசுவாமி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

பின்னர் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலுக்குள் வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி, எம் விஎம் குழும தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி மயில், பள்ளியின் தாளாளர் தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன் செய்திருந்தனர்.


