இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ரவூப் ஹக்கீம், பாபநாசத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி கருத்தரங்கில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார்.
அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது..,
தமிழக முதல்வரை சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு
வாய்ப்பு கிடைத்தால் நட்பு ரீதியாக சந்திக்க உள்ளதாகவும்,
இலங்கை பொருளாதரம் குறித்த கேள்விக்கு..,
படிப்படியாக சரி செய்யப்பட்டு கொண்டு வருகிறது உலக நாடுகளின் நாணயம் விதித்திருக்கின்ற சில கட்டுப்பாடுகளால் அரசாங்கம் மக்களிடம் விதிக்கும் வரியால் மக்களுக்கு கஷ்டங்கள் இருந்தாலும் நாடு நாளடைவில் இந்த நெருக்கடி நிலையில் இருந்து மீளக் கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன எனவும்,
மீனவர்களின் கைது நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு..,
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையில் இந்த மீனவர்கள் குறித்த பிரச்சினை அடிக்கடி உருவாவது என்பது கவலைக்குரிய விஷயம் வடக்கைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் தங்களுடைய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தன்னுடைய மீன்வளங்களை தகாத முறையில் சூறையாடுகிறார்கள் என்ற மாதிரியான குற்றச்சாட்டுகள் அடிக்கடி வருகின்றன, இரண்டு தரப்புக்கும் இடையில் இது சம்பந்தமான பல கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தைகளில் ஓரளவு தீர்வு எட்டப்பட்டாலும் அவற்றை மீறிய அடிப்படையில் அவ்வப்போது கடற்படையினால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்ற போது இது இரண்டு நாட்டுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியான உறவுகளில் சிக்கல் ஏற்படுத்தாமல் சுகமா தீர்த்துக் கொள்வதற்கு எங்களுடைய அரசின் சார்பில் இயன்றவரை மெத்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம் என தெரிவித்தார்.