• Tue. Apr 30th, 2024

முனியாண்டிசாமி கோவில் அசைவத் திருவிழா

Byகுமார்

Jan 18, 2024
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலின் 61வது ஆண்டு விழா வெகு விமர்சியாக, இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் பேரில் அசைவ உணவகம் நடத்தி வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் குடும்பத்துடன் இக்கிராமத்தில் ஒன்று கூடுவர். முன்னதாக முனியாண்டி சாமிக்கு பெண்கள் மலர் தட்டுகளை தலையில் சுமந்து வந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்துவர். அதனை தொடர்ந்து இரவில் 100 ஆடுகள்,  50 சேவல்கள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்யப்பட்டு , அங்கு கூடும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு சம பந்தி அசைவ விருந்து அளித்து மகிழ்ந்தார்.

தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறி குழம்பு என விதவிதமான கலரில் குழம்பு தயாரித்து வருகின்ற பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *