

சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் வைத்து அனுஷ வைபவத்தை முன்னிட்டு மாலை 4 மணி முதல் உலக நன்மை கருதி ரிக் வேத பாராயணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆணைப்படி நடைபெற்றது.

பூஜை தீபாராதனை முடிந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஶ்ரீ ஹரிஷ் சீனிவாசன் அய்யர் நிர்வாகி கே. ஸ்ரீகுமார் பாலசுப்பிரமணியன் அத்யபகர் வரதராஜ பண்டிட்ஜி செய்திருந்தனர்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளிப்பள்ளம் கிளை யில் அனு ஷ வைபவம் ஸ்ரீ மகா பெரியவாளுக்கு பூஜை தீபாராதனை செய்விக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முள்ளி பள்ளம் மடத்தில் தினமும் மாலை 131 மாணவ மாணவியர்கள் இலவச கல்வி பயின்று வருகின்றனர். நாட்டு பசு மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை நடத்தி நிர்வாகி ஸ்ரீகுமார் வெங்கட்ராமன் வீர மணிகண்டன் செய்திருந்தனர்.

