• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ காளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா..,

ByKalamegam Viswanathan

Oct 16, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் கோவில் முன்பு வைத்து கும்மி பாட்டு பாடினர் தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது இன்று காலை கோவிலில் இருந்து வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக சென்று முளைப்பாரியை கரைத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் முளைப்பாரியுடன் பொதுமக்கள் மஞ்சள் நீராடியும் பல்வேறு வேஷங்கள் போட்டும் ஊர்வலத்தில் சென்றனர் திருவிழாவில் மேலக் கால் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை மேலக்கால் கிராம பொதுமக்கள் கிராம கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

இதே போல் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விக்கிரமங்கலம் மற்றும் எட்டூர் கிராம பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.