• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழா..,

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான ‌அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நாடார் மகாஜன மாநில தலைவர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டி ,துணைச் செயலாளர் மனோகரன், பூசாரிகள் மோகன், சிவா ,பழனிவேல், பாலமுருகன் மற்றும் பலர் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் ஊராட்சி சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டது காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்