• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா..,

ByKalamegam Viswanathan

May 5, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று அதிகாலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால்குடத்துடன் சாமி ஆடி வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தியும் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பத்திரகாளி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.