• Sat. Feb 7th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மரம் வளர்ப்பதை வலியுறுத்தி விளையாட்டுப் போட்டிகள்..,

Byமுகமதி

Feb 7, 2026

புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளா் திருமதி பிருந்தா
தலைமையில் புதுக்கோட்டை ஏவிசிசி கல்விக் குழுமத்தில் நடைபெற்றது.

புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் மழலையர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை நகர காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் திருமதி பிருந்தா தலைமையில் ஆதிசாய் ஐஏஎஸ் அகாடமியின் தலைவர் ஏவிசிசி கணேசன், பள்ளியின் தாளாளர் திருமதி மல்லிகா கணேசன் முன்னிலையில் நடைபெற்றது.

இப்போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.மக்கள் அனைவரும் மரம் வளர்க்க வேண்டும் என்கிற பொதுநல விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் நடத்திய அணிவகுப்புப் பேரணி உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை
பெற்றோ்களும் பொதுமக்களும் மிகவும் ஆர்வத்துடன் கண்டு களித்து பாராட்டினர்.
வெற்றியாளர்களுக்கு பதக்கம் அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.