• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

புஷ்பாவை விரட்டிய ஸ்பைடர்மேன்

இந்திய மொழி படங்கள் வெளியாகிறபோது ஆங்கில படங்கள் வெளிவந்தால் இந்திய மொழி படங்கள் வசூல் ரீதியாக பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு படங்கள் சரியில்லை என்றால் வெளியான மறுநாளே படம் தியேட்டரில் பார்வையாளர்கள் இன்றி காத்தாடுகிற நிலைமையும் ஏற்படுகிறது. டிசம்பர் 17 அன்று ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் வெளியானது. டாம் ஹாலண்ட் நடித்துள்ள இந்த படத்தை ஜான் வாட்ஸ் இயக்கியுள்ளார். இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் வெளியானது.

ஸ்பைடர்மேன் படங்களின் ஒவ்வொரு பாகத்திலும் தனித்தனி ஹீரோக்கள் ஸ்பைடர்மேனாக நடித்தார்கள். அவர்களுக்கு தனித்தனி வில்லன்கள் இருந்தார்கள். வில்லன்களுக்கும், ஹீரோக்களுக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இந்த படத்தில் எல்லா ஹீரோக்களும், எல்லா வில்லன்களும் சங்கமிக்கிறார்கள். அதாவது அவன்ஞ்சர் எண்ட் கேம் படத்தில் அனைத்து சூப்பர்மேன்களும் சங்கமித்ததை போன்று. இதனால் அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் இந்தியாவில் மொழி வித்தியாசம் இன்றி தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள்.

படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் படத்தை பார்த்துவிடுவது என்கிற மனநிலை ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 32.75 கோடியை இந்திய திரையரங்குகளில் வசூலித்துள்ளது முதல் நான்கு (வியாழன்-ஞாயிறு வரை) நாட்களில் இந்தியாவில் 100 மொத்த வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அல்லு அர்சுன் நடிப்பில் டிசம்பர் 17 அன்று வெளியான புஷ்பா படம் ஸ்பைடர்மேன் பட வசூலுடன் போட்டிபோட முடியாமல் இரண்டாவது நாளே திரையரங்குகள் பார்வையாளர்கள் வருகை இன்றி வறண்டு கிடக்கிறது.