



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் கோவில் குறிஞ்சியாண்டவருக்கு காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைதொடர்ந்து நாயுடுபுரம் விநாயகர் கோவில் பகுதியில் இருந்து ஊர்வலமாக அப்சர்வேட்டரி, மூஞ்சிக்கல், பாம்பார்புரம், அண்ணாநகர்,டிப்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆண்கள்,பெண்கள், மற்றும் குழந்தைகள் 1000த்திற்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக காவடி எடுத்து வந்தனர்.


மேலும் கொடைக்கானலில் முக்கிய சாலைகளான ஏரிச்சாலை, பேருந்து நிலைய பகுதி வழியாக காவடி குறிஞ்சி ஆண்டவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு குறிஞ்சியாண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
மேலும் நடைபெற்ற காவடி நிகழ்ச்சியை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர். வான வேடிக்கைகள் மற்றும் கடவுள்களின் உருவங்களில் நடனம் ஆடியும் வேல் அழகுகளை குத்தி நேர்த்திக்கடன் செய்தனர்.
மேலும் மயிலாட்டம், ஒயிலாட்டம், வானவேடிக்கை உள்ளிட்டவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் அதனைத் தொடர்ந்து அனைத்து பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

