விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்டமடக்கிபட்டியில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வராகி அம்மனுக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகப் பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்