• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

ByKalamegam Viswanathan

Mar 23, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், பாலித்தீன் பைகளை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தென்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை வகித்தார் துணைத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலை, பற்றாளர் நாகராஜன் அறிக்கை வாசித்தார்.

செயலர் முனியராஜ் வரவேற்றார். முள்ளிபள்ளத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார் துணைத் தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாதேவி அறிக்கை வாசித்தார். செயலர் மனோபாரதி வரவேற்றார். மேலக்காலில் நடைபெற்ற கூட்டத்தில் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலாளர் லோகன் தலைமை வகித்தார். செயலர் விக்னேஷ் வரவேற்றார், ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சாமி சித்தாண்டி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது..