• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழனி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்

ByT. Vinoth Narayanan

Jan 22, 2025

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 அன்று தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக பயணிகளின் வசதிக்கு மதுரை – பழனி இடையே பிப்ரவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை – பழனி தைப்பூச சிறப்பு ரயில் (06722) குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 08.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழனி – மதுரை தைப்பூச சிறப்பு ரயில் (06721) பழனியில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு இரவு 05.45 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.