• Tue. Feb 18th, 2025

கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம்

ByKalamegam Viswanathan

Jan 22, 2025

யா.ஒத்தக்கடை, கொடிக்குளம், அரும்பனூர், நரசிங்கம் உள்ளிட்ட கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள நரசிங்கம் சாலையில் அனைத்து கிராம பொதுமக்கள் சார்பில் நரசிங்கம் சாலையில் பொதுக்கூட்டம் (ஜன.21) நடைபெற்றது. இதில், யா.ஒத்தக்கடை, கொடிக்குளம், நரசிங்கம் மற்றும் அரும்பனூர் உள்ளிட்ட கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம், வீட்டு வரி, குடிநீர் வரி, பலமடங்கு உயரும், நூறு நாள் வேலை பறிபோகும். எனவே, ஒத்தக்கடை சுற்றி உள்ள கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று தமிழக அரசை வலியுறுத்தினர். இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பிலால் ராஜா தலைமை தாங்கினார். விசிக கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டி, விசிக செல்லப் பாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் சரவணன், சிபிஐ (எம்) கிழக்கு ஒன்றிய செயலாளர் கலைச் செல்வம், வணிகர் சங்கத் தலைவர் கணேஷன், தமிழ் புலிகள் கட்சி விஜயகுமார், சிபிஐ புறநகர் மாவட்ட செயலாளர் முத்துவேல் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் நிறைவுரை ஆற்றினார். இறுதியில், வணிகர் சங்க பொதுச் செயலாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
கூட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.