• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நாளை முதல் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை- வேலூர்- சென்னை கடற்கரை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06033/06033) இனி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை -திருவண்ணாமலை இடையேயான சிறப்பு ரயில் டிசம்பர் 5 ம் தேதி (நாளை) முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 3 நாட்களுக்கு இயக்கப்படும். மறுமார்க்கமாக திருவண்ணாமலை-சென்னை கடற்கரை சிறப்பு ரயில் டிசம்பர் 6ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் காலை 09.05 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். அதே போல் (ரயில் எண் 06115/06116) தாம்பரம் -திருவண்ணாமலை -தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய இரு தினங்களுக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளது.