• Sun. Jun 16th, 2024

குமரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் உயர் நிலை, மேல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 170_மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பரிசு.

பிரதமர் மோடிக்கு தேர்தல் பயம் வந்து விட்டது ஆகவே தான் நான் கடவுள் என உளற. துவங்கிவிட்டார் என நாகர்கோவிலில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நாகர்கோவில் ஒழுங்கினசேரியில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவை தலைவர் எப்.எம் இரத்தினம் தலைமையில் நடந்தது.
நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டு பேசிய போது வரும் 3-ம் தேதி தலைவர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாள் நிறைவு விழாவும் 101 -ம் ஆண்டு துவக்க விழாவும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி நாகர்கோவில் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உயர்நிலை மேல்நிலை கல்வியில்.முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற 170 மாணவ மாணவிகளுக்கு விருதும் சிறப்பு பரிசும் வழங்கப்பட்ட உள்ளது. அதேப்போல் கிழக்கு மாவட்டத்தில் 30 பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்ற பள்ளிகளாக கண்டறியப்பட்டுள்ளது இந்த பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் 180 பேருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் அத்தனை ஊராட்சி பேரூராட்சி பகுதியில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது அதற்காக இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். பிரதமர் மோடி நானே கடவுள் என்று உளறுகிறார். பூரி கோவில் சாவி தமிழ் நாட்டில் இருக்கிறது என்று சொல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது.
வட மாநிலத்திலும் இந்தியா கூட்டணி வலு பெற்றுள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்
நிகழ்வில் மாநில குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சரான என். சுரேஷ் ராஜன், மாநில மகளிரணி தலைவி ஹெலன் டேவிட்சன் உட்பட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed