

மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இக்கோயிலில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு, மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று, சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை அடுத்து, பெருமாளுக்கு பிரசாதங்கள் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத் திருக்கோவிலில், ஆடி பௌர்ணமி முன்னிட்டு, காமாட்சி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் பொடி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .
இதில் ,பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாத வழங்கப்பட்டது. இதேபோன்று, மதுரை மதிச்சியம் அருள்மிகு வீரமா காளியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமி முன்னிட்டு, அம்மனுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
இதே போன்று, மதுரை மேலமடை தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், ஆடிப் பவுர்ணமி முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
இதை அடுத்து சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர். ஆடிப் பௌர்ணமியை முன்னிட்டு, மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில், பக்தர்கள் ஏராளமானோர் கிரிவலம் வந்தனர்.

