


ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மூலம் வட்டார வள மையம் முசிறி சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பல்தா சார் தலைமை வகித்தார் மேற்பரவையாளர் அமுதா வரவேற்றார் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு வட்டார உறுப்பினர் தேவகி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார். முகாமில் உடல் இயக்க குறைபாடு அறிவுசார் குறைபாடு பார்வை திறன் குறைபாடு செவித்திறன் குறைபாடு குழந்தைகள் நல மருத்துவம் தேசிய குழந்தைகள் நலத்திட்டம் குழு நரம்பியல் மருத்துவம் ஆடியோ கிராம் டெஸ்ட் உள்ளிட்டவை செய்யப்பட்டது. முகாமில் 105 மாணவமாணவியரும் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்,ஆசிரியர் பயிற்றுநர்கள் சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

