• Thu. Apr 9th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!

Byவிஷா

Jun 7, 2023

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கடன் பெறும் வகையில் ஜூன் 12ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இதில்17 வங்கிகள் பங்கேற்க உள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஜூன் 12ம் தேதி கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த கல்விக்கடன் முகாம் 12ம் தேதி காலை காலை 10 மணி முதல் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 17 வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன. இதுகுறித்த மேலும் ஏதேனும் தகவல்களுக்கு ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தினை மாணவ, மாணவிகள் விவரம் கேட்டுக்கொள்ளலாம். மேலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக உயர்கல்வி கற்க முடியாத மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று நிதியுதவி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.