• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

Byவிஷா

Nov 15, 2023
சபரிமலைக்கு நாளை மறுநாள் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை கோயில் உலகப் புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். 
இந்த நிலையில், நடப்பாண்டில் மலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன்படி, நாளை மறுநாள் முதல் ( 16-ந் தேதி முதல்) அடுத்தாண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5 மணி வரை கோயில் நடை சாத்தப்பட உள்ளதால், டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து மட்டும்  கோடிக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஆண்டு தோறும் செல்வார்கள் என்பதால் இந்த சிறப்பு பேருந்துகள் சேவையை தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த சிறப்பு பேருந்துகளை www.tnstc. .in மற்றும்  TNSTC Official App மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதவி எண்கள்:

மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெறுவதற்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களும் உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் வசதிகள் மட்டுமின்றி பக்தர்களின் வசதிக்காக வாடகை அடிப்படையிலும் பேருந்துகள் விடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.