திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து முதல்வர் விஜய் பேசிய நிலையில், அதற்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர் முதல்வர் விஜய் இடமே பேச அனுமதி அளிக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
முதல்வர் விஜயும் சபாநாயகரிடம் வாய்ப்பு கொடுங்க என்று வலியுறுத்திக் கூறினார்.

திமுகவினர் மீது முதல்வர் விஜய் முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார் சபாநாயகர்.
அனுமதி அளிக்க முடியாது என சபாநாயகர் கூறியதை அடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.








