மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மும்மொழிக் கல்வி மூலம் குலக்கல்வியை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை இந்திய அரசு ஏற்றால் முன்மாதிரியாக திகழும். மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் வரையறை செய்யும் பட்சத்தில், ஜிஎஸ்டி வரியையும் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு வசூலிக்குமா?.
சிபிஎஸ்சி பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? இஸ்ரோ விஞ்ஞானி ஆராய்ச்சி தலைவர் நாராயணன், சிவன், மயில்சாயி அண்ணாதுரை உள்ளிட்டோர் தமிழில் அரசு பள்ளியில் பயின்றவர்கள்தான். திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும், முருகனும், அய்யா வைகுண்டரும் பார்த்துக்கொள்வார்கள்” என்றார் அப்பாவு.