• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கையூட்டு பெற்று போக்சோ வழக்கை மறைத்த எஸ் பி.,

ByB. Sakthivel

Jul 29, 2025

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டு மக்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரி நகரப் பகுதியான உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் டிஐஜி சத்ய சுந்தரம் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டு நிவாரண வழங்கினார்.

மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் தலைமையிலான கட்சியினர் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில்…

புதுச்சேரியில் தற்போது காவல் கண்காணிப்பாளராக உள்ள செல்வம் 2017 -ம் ஆண்டு பெரிய கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த பொழுது அவரால் விசாரிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று போஸ்கோ வழக்குகள் சரிவர விசாரணை செய்யவில்லை.

அவருடைய பணியின் அலட்சியமாக…
கோப்புகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் அருகில் உள்ள ஒதியன் சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வழக்கு எண் 141/2019 ல் நகை திருட்டு வழக்கின் FIR பெரிய கடை காவல் நிலைய வழக்காக மாற்றி காட்டி உள்ளார்கள். எனவே ஒரு FIR ஐ மறைக்க சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.

எனவே காவல் கண்காணிப்பாளர் செல்வம் மற்றும் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் மூடி மறைக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரணை செய்ய வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் ‌வழக்க தொடர போவதாகவும் அவர் எச்சரித்தார்.