பத்திரிக்கையாளர்கள் சமுதாயத்தில் முன்னுதாரணமாக மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டுமென திண்டுக்கல் எஸ் பி ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்..

திண்டுக்கல் மாவட்ட TUJ சங்கத்தின் சார்பில் பொருளாளர் P.குமாருக்கு நினைவேந்தல் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் அரியநாயகம் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டி.யு.ஜே சங்கத்தின் சார்பில் குமாரின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார். இதில் ஏ.டி.எஸ்.பி தெய்வம், ரூரல் டிஎஸ்பி சங்கர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் ஆகியோர் நினைவு தீபங்களை ஏற்றினர்.
இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் ஜெயன் நிர்வாகிகள் ஹரிஹரன்,செல்வம், சையது இப்ராகிம், ரெனிசன்,பாலசிந்தன் ,சபரீஸ்வரன், வேளாங்கண்ணி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிறைவாக மாவட்ட செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார். இதில் திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் பேசியதாவது: உலகத்தில் பெரிய நோய்களை எல்லாம் நீக்கினாலும் கூட, விபத்து பெரிய அழிக்க முடியாத நோயாக உள்ளது. நமது கவனக்குறைவு தான் விபத்துக்கு காரணம். அஜாக்கிரதையாக நாம் பயணத்தை எப்போதும் துவக்க கூடாது. எதிர்த்து வாகனங்களில் வருபவர்கள் எப்படி வருவார்கள் என்று நமக்கு தெரியாது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் மட்டும் 218 பேர் இறந்துள்ளனர். இதுவும் ஒரு கொலை போன்று நடக்கிறது. விலை மதிப்பில்லாத மனித உயிர்கள் பலியாவதை நாம் தடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். பத்திரிகையாளர்கள் சமுதாயத்துக்கு ஒரு முன்னுதாரணமாக ஒரு எடுத்துக்காட்டாக அவர்கள் இருக்க வேண்டும். இந்த மாதிரி இரங்கல் கூட்டத்தில் நாம் சந்திக்காமல், நல்ல கூட்டங்களை நாம் சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.





