• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

நகர் மன்ற உறுப்பினர்களே சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம்..,

ByP.Thangapandi

Jul 8, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டு பூக்கார தெருவில் 100 க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.,

இந்த பகுதியில் முறையாக சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை என கூறப்படுகிறது., இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம் சாட்டி.,

இன்று அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் கலாவதி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சாக்கடை கால்வாய்களை தூர்வாரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.,

தகவலறிந்து விரைந்து வந்த நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி மற்றும் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான நகராட்சி நிர்வாகத்தினர் சாக்கடை கால்வாயை தொடர்ந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.,

சாக்கடை கால்வாயில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றிய பின் தூர்வாரும் பணி செய்வது இயல்பான ஒன்று என்றும், கடந்த இரு தினங்களாக தேங்கியுள்ள சாக்கடை நீரை வெளியேற்றும் பணி நடந்து கொண்டிருக்கும் போதே நகர் மன்ற உறுப்பினர்கள் ஏன் இவ்வாறு தூர்வாரும் பணியை செய்தார்கள் என தெரியவில்லை என நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தெரிவித்தார்.,