• Fri. Jan 17th, 2025

கோவையை வஞ்சிக்கும் தென்னக ரயில்வேதுண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு

BySeenu

Feb 29, 2024

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் 6 ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த அறிவிப்பிற்கு கோவையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்குவது குறித்தும் ஆலோசித்து, வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களை கோவை வழியாக இயக்க வலியுறுத்தி அனைத்து கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க அறிவித்திருந்தனர்.
இதன் முதற்கட்டமாக இன்று ரயில் பயணிகளிடம் பிரசுரங்கள் வழங்கி தென்னக ரயில்வேயின் அறிவிப்பை எடுத்துரைத்தனர். மேலும் 7ம் தேதி மாட்டு வண்டியில் சென்று மனு கொடுக்கும் போராட்டம் குறித்தும் மக்களிடையே தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.