
சிறு குறு மற்றும் சுய தொழில் புரியும் பெண்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் விதமாக சிட்பி வங்கி சார்பாக, “ஸ்வாவலம்பன் மேளா’ எனும் கைவினை பொருட்களுக்கான கண்காட்சி கோவையில் துவங்கியது.
சுயதொழில் புரியும் பெண்கள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்புகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை
செய்யும் வகையில், சிட்பி வங்கி சார்பாக, “ஸ்வாவலம்பன் மேளா’ எனும் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஸ்வாவலம்பன் மேளாவின் கைவினைப் பொருட்களின் கண்காட்சி கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா மண்டப அரங்கில் துவங்கியது. பிப்ரவரி 28 ந்தேதி துவங்கி மார்ச் 3 ந்தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழாவில், சிட்பியின் கோவை டி.ஜி.எம்.சிபி .அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிட்பி வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ரவீந்திரன், என்.எம்.சி.டி.தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சங்கரநாராயணன், கொடிசியா செயலாளர் சசி குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்..
இந்த கண்காட்சியில் மாநிலம் முழுதும் இருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஸ்வாவலம்பன் மேளா குறித்து, சிட்பி வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் ரவீந்திரன் கூறுகையில்..,
பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. சிறு, குறு தொழில் முனைவோருக்கு உதவும் நோக்கத்தில் சிட்பி வங்கி சார்பில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு குறு தொழில்களின் பங்கு முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். எனவே இது போன்ற கண்காட்சிகள், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக நடத்தபடுவதாக கூறினார்.

