• Sun. Dec 3rd, 2023

மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள்

Byகுமார்

Aug 17, 2022

மதுரையில் தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் துவக்கம். பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்பு. 54 வது எல்.ஐ.சி. தென்மண்டல அளவிலான பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் விளையாட்டு அரங்கில் துவங்கியது . எல்.ஐ.சி மதுரைக் கோட்ட முதுநிலைக் கோட்ட மேலாளர் சுவாமிநாதன் இவ்விரு போட்டிகளையும் துவக்கிவைத்தார் . இப்போட்டிகளில் தமிழ்நாடு , கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களிலிருந்து பேட்மின்டன் போட்டிக்கு 22 விளையாட்டு வீரர்களும் , டேபிள் டென்னிஸ் போட்டிக்கு 20 விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் உலக அளவிலான பேட்மின்டன் வீரர் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜெய்சன் சேவியர் , மற்றும் உலக அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர் சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் , மற்றும் இந்திய அளவிலான வீரர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள் . எல்.ஐ.சி. மேலாளர்கள் , அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை LIC விளையாட்டுக்குழு சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *