• Sat. Apr 27th, 2024

மதுரையில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி

Byகுமார்

Aug 19, 2022

மதுரை ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி- 2022 வேலம்மாள் ஐடா ஹாலில் நடைபெற்றது.

மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி விவசாய கண்காட்சி துவக்கி வைத்தார்
மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இன்று முதல் (19.20, 2122) ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது.யுனைடெட் அக்ரிடெக் 2022 சார்பில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் 4 நாள்கள் நடைபெறுகிறது.200க்கும் மேற்பட்டஸ்டால்களில் நவீன விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர்பாசனம், சூரிய ஒளி மின்சார பயன்பாடு, விவசாய இடுபொருட்கள், இயற்கை உரங்கள். விவசாயிகளின் நவீன உற்பத்தி பொருட்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. கண்காட்சி நிர்வாக இயக்குநர் பாக்கியராஜ் கூறும்போது தென் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இது.


இதில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள்200க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் நவீன விவசாய தொழில்நுட்ப உபகரணங்கள், சொட்டுநீர்பாசனம், சூரிய ஒளி மின்சார பயன்பாடு, விவசாய இடுபொருட்கள், இயற்கை உரங்கள். விவசாயிகளின் நவீன உற்பத்தி பொருட்கள் , விவசாய மூலப்பொருட்கள். இடம்பெற்றுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பொதுமக்கள் பங்குபெற வாகன வசதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *