• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் -ரணில் விக்ரமசிங்கே !!!

ByA.Tamilselvan

Sep 1, 2022

இலங்கை விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை ரணில் விக்ரமசிங்கே நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்குறித்து அவர் பேசும் போது…
இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சில நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் வகையில் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவி பெறுவதற்கான பேச்சு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் பொருளாதார மீட்பு திட்டம் உறுதி செய்யப்படும். பல நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதை மாற்றி அமைப்பது தொடர்பாக அந்த நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என தெரிவித்தார்.