மதுரை வளையங்குளம் சுற்று சாலை அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கல்லூரி பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் அந்த பாடலை எழுதிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பிரபல திரைஇசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் அந்தப் பாடலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது இறையன்பு மற்றும் இசையமைப்பாளர் பரத்வாஜ் மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றினார்கள். அப்போது இசையமைப்பாளர் பரத்வாஜ் தான் இசையமைத்த ஆட்டோகிராப், ஜேஜே உள்ளிட்ட படங்களில் இருந்து பாடல்களை மாணவர்களிடம் பாடினார்.
பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் மாணவர்களிடம் பேசுகையில்:
இந்த கல்லூரியின் பாடலை இசை அமைப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் பாடல் வரிகள் மிக அழகாக உள்ளது. எனது படத்தின் பாடல்களை போர்ச்சுகள் மற்றும் சவுத் ஆப்பிரிக்காவில் ஜூலுவில் உள்ள படங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கேட்டு வாங்கியுள்ளனர்.
நன்றாக படித்தால் வாழ்க்கையில் ஒரு தெளிவு இருக்கும். நான் இறையன்பு சாருக்கு மிகப்பெரிய ரசிகன். அப்போது மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றிய நாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறுகையில்:

தாலாட்டில் இருந்து மனிதன் இசையை ரசிக்கிறான். பரத்வாஜ் அவர்கள் எனக்கு 20 ஆண்டுகாலமாக தெரியும் அவரது இசையை சினிமா துறையை சேர்ந்தவர்களை விட நான் அறிவேன். இந்த கல்லூரியில் தாளாளருக்கு ஒரு கோரிக்கை கல்லூரி ஆண்டு விழாவிற்கு பரத்வாஜை அழைத்து இசைக் கச்சேரி நடத்துங்கள்.
ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டுகளாக இருக்கும் யாரையாவது அழைத்து அறிவுரை சொல்லச் சொல்லி இவர்களுக்கு (மாணவர்களுக்கு) தண்டனை கொடுக்கிறீர்கள்.
அப்படியும் அறிவுரை என்கிற பெயர்களில் அவர்கள் கல்லூரியில் செய்யாத இதை தான் அறிவுரையாக சொல்கிறார்கள் செய்ததை அல்ல. எனவே மாணவர்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு இன்புற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி வரும்போது பாரத்வாஜ் மாணவர்களுக்கான பாடலோடு வாருங்கள் அப்போது மாணவர்கள் உங்களைப் பார்த்து கலக்கப்போவது யாரு என பாடுவார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறுகையில்:
கல்லூரி பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். பாடலின் பாடல் ஆசிரியர் இறையன்பு அற்புதமாக எழுதியிருக்கிறார். சினிமா பாடல்களுக்கு இசையமைத்த பிறகு கல்லூரிக்கு இசையமைப்பது அருமையான அனுபவமாக உள்ளது.
கல்லூரியில் கச்சேரி நடத்த வேண்டும் என இறையன்பு கூறினார் மிகவும் சந்தோசம். இப்போது அதிகமாக இசையமைப்பாளர்கள் அதை தான் செய்கிறோம். மக்களுக்கு திரைப்பட இசை அதிகம் பிடித்துள்ளது அதனால் இசை நிகழ்ச்சிகள் நல்லா இருக்கும்.

வாழ்க்கையில் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக அஜித்தை தெரியும் அன்று இருந்து இன்று வரை ஆறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளேன் .
எல்லா விதமான கதைகளுக்கும் இசை அமைத்துள்ளேன். பலர் அவரை தலை அழைப்பதற்கு காரணமான தல போல வருமா பாடலை இசை அமைத்தேன் மிகவும் மகிழ்ச்சி. படத்தில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்பு வந்துள்ளது ஆனால் நான் இன்னும் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இனி வந்தால் பார்க்கலாம் என இசையமைப்பாளர் பரத்வாஜ் கூறினார்.