தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நிலை குறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த, தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும், தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் பேசியதாவது: விஜயகாந்த் உடல் பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார், அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய அவர், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார் என்றும், அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம் கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது தெரியும்.
முன்பை விட தோல்வியிடத்தில் உள்ளோம் என்பதை உணர்ந்துள்ளோம், தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் செயல்படுவோம் என தெரிவித்தார். இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாகவும், அனைத்து சாதி அர்ச்சகர் அறிவிப்பை வரவேற்பதாகவும் கூறினார்.




