புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமே தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை பின்புறம் சாலை தான் பொதுவாக மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இச்சாலை சரி செய்யாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக அமைப்பினர் ஒன்று சேர்ந்து தொடர்ந்து இச்சாலையை சரி செய்து தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து சமூக அமைப்பினர் ஒன்றிணைந்து சாலையை சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை அட்டையை கழுத்தில் மாற்றிக்கொண்டு அரசு பொது மருத்துவமனை சாலை பகுதியிலுள்ள கடைகள் மற்றும் சாலையில் சென்ற பொது மக்களிடம் செய்ய பிச்சை எடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது…