• Fri. May 3rd, 2024

இளம் வயதில் இத்தனை சாதனைகளா.., பிரமிக்க வைக்கும் யோகா ஆசிரியை டாக்டர் பிரிஷா..!

திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் கார்த்திகேயன், வழக்கறிஞர் தேவிப் பிரியாவின் மகள் 14 வயதாகும் பிரிஷா மீனா சங்கர் வித்யாலயாவில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 2 வயதிலிருந்து தன் பெற்றோர்கள் மற்றும் பாட்டியிடமிருந்து யோகாசனங்கள் கற்று வருகிறார். தனது தந்தையின் ஊக்கத்தால் இதுவரை 100 உலக சாதனைகள் படைத்துள்ளார். 
200 க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார். உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள், யோகாசனங்கள், நீச்சல், மற்றும் கண்களை கட்டிக்கொண்டும் பல திறமைகள் செய்து, சாதனைகள் படைத்துள்ளார். இதற்கான சான்றிதழ் குளோபல் யுனிவர்சிட்டி U.S.A. வழங்கியுள்ளது. 
இளம் வயதில் மூன்று முனைவர் பட்டம் உலகிலேயே முதன்முதலாக பெற்றவர் பிரிஷா. இளம் வயது யோகா ஆசிரியர் சான்றிதழை NCPCR மத்திய அரசு வழங்கி உள்ளது. 2022ம் ஆண்டு பிரிஷாவை சர்வதேச அளவில் 68 நாடுகளில் இருந்து குழந்தை மேதையாக தேர்ந்தெடுத்து துபாயில் கௌரவித்தனர். மலேசியா, தாய்லாந்து நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகாசன போட்டியில் தங்கங்கள் வென்று உலக சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். 
மலேசியாவில் "லிட்டில் யோகா ஸ்டார்' விருது அளித்து கௌரவித்தனர். மலேசியாவில் 18 நாட்கள் யோகா வகுப்பு எடுத்துள்ளார். "இளம் சாதனையாளர்" 2017, 2018, 2019, 2020, 2021, 2022 மற்றும் சக்சஸ் விருது, 2020 அன்னை தெரசா விருது, அப்துல் கலாம் விருது, பாரதி கண்ட புதுமை பெண் விருது, யோகா ராணி. யோககலா, யோக ஸ்ரீ, ஆசனா ஸ்ரீ, யோக ரத்னா, இளம் சாதனையாளர் லிட்டில் சாம்பியன் யங் அச்சீவர் அவார்டு, பீஸ் அவார்டு, சாதனையாள் விருதுகள், ஒன்டர் உமன் அவார்டு 2022, உமன் பிரிமியம் அவார்டு, பல்வேறு நிறுவனங்களில் இருந்து எக்செலன்ஸ் அவார்டு, ரோட்டராக்ட் சங்கம் அவார்டு பெற்றுள்ளார்.

Health influencer award, உலகின் சிறந்த ரோல்மாடல், Glory of Asia போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். தன்னைப் போலவே மற்றவர்களும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏழை மாணவர்கள் மற்றும் பார்வையற்றோர் பள்ளியிலும் வகுப்பு எடுத்து தன்னுடைய பார்வையற்ற மாணவர் “கணேஷ்குமார்”ஐ உலக சாதனை புரிய வைத்துள்ளார். முதியோர்கள், காவல் துறை அதிகாரிகள், எய்ட்ஸ் விடுதி, N.C.C. மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளிலும் 4 வருடங்களாக இலவசமாக யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார். கொரோனா காலங்களிலும் ஆன்லைன் வகுப்பு எடுத்து பலருக்கும் மூச்சு பயிற்சி கற்றுக்கொடுத்து உதவி செய்தார். நேஷனல் பூத் பெஸ்டிவல் 2020, 2021 மத்திய அரசின் யோகா போட்டியில் நடுவராக பங்கேற்றுள்ளார். திருநெல்வேலியில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா இளையோர் அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டியில் பிரிஷாவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கௌரவப் படுத்தியுள்ளனர்.

மாணவர்கள்,IAS மற்றும் அனைத்து போட்டித்தேர்வுகளில் பிரிஷாவைப் பற்றி படிப்பது, குறிப்பிடத்தக்கது. மேலும் “யோகா இன்றே செய்வோம், இன்பம் பெறுவோம்”. என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். யோகாசனங்கள் மட்டுமல்லாமல் Cross Bow Shooting தேசிய அளவில் தங்கம் வென்றுள்ளார். Cross Bow கராத்தேயில் ப்ளு பெல்ட் பெற்று, ஆல் இந்தியா கராத்தே போட்டியில் தங்கம் வென்றுள்ளார். இவர் டென்னிஸ், பூப்பந்து, ஸ்கேட்டிங் கிபோர்டு, கித்தார், ரூபிக்ஸ் க்யூப், இசை, நடனம், ஓவியம் போன்றவற்றிலும் கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குகிறார். எல்லோரும் யோகாசனம் செய்து நோய் இல்லாத வாழ்க்கையை வாழ பிரிஷா பாடுபட்டு வருகிறார்.

உலகின் இளம் வயது பார்வையற்றோருக்கான யோகா ஆசிரியர் டாக்டர் பிரிஷாவின் சாதனைகள்:

1- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு சைக்களில் அதிக தூரம் ஓட்டுதல்.

2- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு ஹீவர் போர்டில் அதிக தூரம் ஓட்டுதல்.

3-.20நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, வாம தேவ ஆசனத்தில்,
அதிக பொருட்களை அடையாளம் காணுதல்.

4-.20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, ஹீலா ஹீப் (வளையம்)
சுற்றிக் கொண்டு சைக்களில் அதிக தூரம் ஓட்டுதல்.

5- 20 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, ஒரு கையால்
சைக்கிளை, அதிக தூரம் ஓட்டுதல்.

6-ஏக பாத வாமதேவ அனுமன் ஆசனத்தில், கண்களை கட்டிக்கொண்டு
அதி வேகமாக திருக்குறள் எழுதுதல்.

7- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, அனுமன் ஆசனத்தில்
அதிக அளவில் இயற்பியல் சூத்திரங்கள் எழுதுதல்,

8- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, தனிம அட்டவணையில்
உள்ள வேதியல் கூறுகளின் சின்னங்களை அதிக அளவில் எழுதுதல்.

9- கண்ட பேருண்ட ஆசனத்தில், கண்களை கட்டிக்கொண்டு,
அதி வேகமாக ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு அடித்தல்.

10- வாம தேவ ஆசனத்தில், கண்களை கட்டிக் கொண்டு,
அதிவேகமாக ஊசியில் நூல் கோர்த்தல்.

11- வாம தேவ ஆசனத்தில், கண்களை கட்டிக் கொண்டு, அதி வேகமாக
எந்த 5 இலக்க எண்களை 55555 ஆல் பெருக்குதல்.

12- 20 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, வாம தேவ ஆசனத்தில்
இரண்டு கைகளாலும் அதிக நட்சத்திரங்கள் வரைதல்.

13- வரம் தேம ஆசனத்தில், கண்களை கட்டிக்கொண்டு, அதிவேகமாக
சதுரங்க பலகையில் சதுரங்க நாணயங்களை அடுக்குதல்.

14- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, 5 மீட்டர் தூரத்தில் காட்டு
சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல்,

15- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, 3 மீட்டர் தூரத்தில்
காட்டும் முத்திரைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல்.

16- 20 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, 1 மீட்டர் தூரத்தில்
ஆசனங்கள் அதிக எண்ணிக்கைகள் அடையாளம் காட்டுதல்,

17- 20நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, எல்.இ.டி. திரையில்
அதிக எண்ணிக்கை படிமங்களை அடையாளம் காட்டுதல்.

18- 20நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, எல்.இ.டி. திரையில்
அதிக வார்த்தைகளை படித்தல்.

19- 10 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, சக்கர பந்த ஆசனத்தில்
புத்தகத்தில் இருந்து அதிக வார்த்தைகள் படித்தல்.

20- 10 நொடிகளில், கண்களை கட்டிக்கொண்டு, பூர்ண சலப ஆசனத்தில்,
அதிக எண்ணிக்கை பந்துகளை கிண்ணத்தில் வைத்தல்.

21- 10 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, வேறு ஒருவர் உடம்பில்
ஒட்டியுள்ள பலூன்களை அதிக அளவில் கத்தியால் குத்தி வெடித்தல்.

22- வஜ்ர ஆசனத்தில், கண்களை கட்டிக்கொண்டு, ஜிக்சா பசில்
(கல்விப் புதிர் ) அதி விரைவில் அடுக்குதல்.

23- 10 நொடிகளில் கண்களை கட்டிக்கொண்டு, பத்மாசனத்தில், அதிக
அட்டைகள் பெட்டிக்குள் மூடி அதிக எண்ணிக்கை அடையாளம் காட்டுதல்,

24- ஹனுமன் ஆசனத்தில், கண்களை கட்டிக் கொண்டு,
பிரமிட் கன சதுரம் சிக்கல் தீர்த்தல்.

25- சுகாசனத்தில், கண்களை கட்டிக் கொண்டு, 100 வது கணித வாய்ப்பாடு
அதி வேகமாக எழுதுதல்.

26- 10 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, வேறு ஒருவர் பிடித்துள்ள
வாழைப்பழங்களை அதிக எண்ணிக்கைகள் கத்தியால் வெட்டுதல்.

27- 20 நொடிகளில் கண்களை கட்டிக் கொண்டு, இரு கைகளாலும்,
“ஐ யம் தி பெஸ்ட்” வாசகங்களை அதிக எண்ணிக்கைள் எழுதுதல்.

28- 20 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, மூன்று வளைவு
ஆசனங்களை, அதிக எண்ணிக்கைகள் செய்தல்.

29- 10 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, வேறு ஒருவர் சாந்தி
ஆசனத்தில் படுத்து, சுற்றி உள்ள வாழைப்பழங்களை கத்தியால் வெட்டுதல்.

30- 20 நொடிகளில், கண்களை கட்டிக் கொண்டு, வாம தேவ ஆசனத்தில்
சீட்டுக்கட்டு அட்டைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல்.

இப்படி ஏராளமான சாதனைகளை தாண்டி பிரிஷா.., அடுத்தவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை உணர்தல், கண்களால் பார்த்து உடலில் உள்ள நோய்களை கண்டறிதல், கண்களால் பார்த்து ஸ்பூனை வளைப்பது, கண்களை கட்டிக்கொண்டு அனைத்து செயல்பாடுகளையும் செய்வதும், நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதும் இது போன்ற திறமைகளை யோகா மற்றும் தியானத்தின் மூலம் பெற்று உள்ளார் என்பது ஆச்சரியப்படக்கூடிய விஷயமே.
எண்ணற்ற சாதனைகளை படைத்துக் கொண்டே இருக்கும் பிரிஷா மென்மேலும் சாதனையை படைக்க தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல்டுடே வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *